
Kizhakkum Merkkum - Paperback
Pay over time for orders over $35.00 with
Offers & Perks
Earn 10 points with this purchase
Added to your rewards balance after checkout.
100 points welcome bonus
Create an account and start with extra points.
தமிழாசிரியனின் எல்லைக்கு அப்பாற்பட்டுள்ள இத்தலைப்புக்கள் என்னை வியப்படையச் செய்தன. எனினும், ஒரு தமிழ் மாணவன் இத்தலைப்புக்களைப் பற்றி எவ்வாறு சிந்திக்கின்றான் என்பதை அறியும் நோக்குடன் இவற்றை எனக்குத் தந்ததாகவே கருதினேன். அதனாலேயே இப்பேச்சுக்களில் தமிழ் இலக்கியம் அதிகம் இடம் பெறவில்லை. இவற்றைத் தயாரிக்க முக்கியமாகப் பயன்பட்ட நூல்கள் நார்த்ரோப் என்பவர் எழுதிய 'கிழக்கும் மேற்கும்' என்ற ஆங்கில நூலும், மாஸ்கோ வெளியீடாகிய "Historical Materialism and Dialectical Materialism" என்ற நூலுமேயாகும். இவை தவிரச் சிவஞான சித்தியாரும் திரு. எஸ். இராதாகிருஷ்ணனுடைய பல நூல்களும் பயன்பட்டன.
இப்பேச்சுக்கள் முதலிலேயே எழுதப் பெற்றவையல்ல. வாய்மொழியால் பேசியதை ஒலிப்பதிவு செய்து, பின்னர் அதி லிருந்து தட்டச்சுச் செய்யப்பெற்றவை யாகும். எனவே, நடையில் ஓரளவு மாறுபாடு இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை.பேச்சு மொழிச் சொற்கள் மிகுதியும் இடம் பெற் றிருப்பதற்கும் அதுவே காரணமாகும்.
'இவர்தமக்கு யார் தாமோ தரம்' என்று கூறத்தக்க வகையில் அனைத்திற்கும் ஆணி வேராய் நின்று இந்நிறுவனம் ஆல்போல் தழைத்து அறுகுபோல் படர்ந்து பலர்க்கும் நலம் புரியப
Free shipping on orders over $75. Standard shipping takes 3-7 business days. Eligible items may be returned within 30 days of delivery. Conditions apply.
